Tuesday, February 17, 2026

சக்தித் திருமகன் படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு

நடிகர் விஜய் ஆண்டனியின் 25-வது படமாக உருவான ‘சக்தித் திருமகன்’ திரைப்படம் கடந்த செப்டம்பர் மாதம் 19ம் தேதி திரைக்கு வந்தது. இந்த படத்தை அருண் பிரபு எழுதி இயக்கியிருந்தார்.

படத்தின் கதையும் திரைக்கதையும் நன்றாக இருந்ததால் ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களைப் பெற்றது. வணிக ரீதியாக ரூ. 10 கோடி வரை வசூலித்தது.

இந்த நிலையில், இப்படம் ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வருகிற அக். 24 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related News

Latest News