பாலிவுட் சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் ஷாருக்கான். இவருக்கு இரண்டு மகனும் ஒரு மகளும் உள்ளனர்.
ஷாருக்கான் அடுத்ததாக ‘தி கிங்’ என்ற படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தில் அவருடன் இணைந்து அவரது மகள் சுஹானா கான் நடிக்கிறார்.
இந்நிலையில், மகாராஷ்டிராவில் விவசாய நிலம் தொடர்பான ஒரு போலீஸ் புகார் விவகாரத்தில் நடிகர் ஷாருக்கானின் மகள் சுஹானா கான் பெயர் வரும் செய்தி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அலிபாக்கில் ரூ.22 கோடி மதிப்புள்ள இரண்டு நிலங்களை விவசாயத்திற்காக வாங்குவதாக பத்திரப்பதிவின்போது கூறிவிட்டு பண்ணை இல்லம் கட்டியதாக சுஹானா கான் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்பும், நடிகர் ஷாருக்கானின் மகன் போதை பொருள் சம்பந்தமான விவகாரத்தில் கைது செய்யப்பட்டதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.