Tuesday, May 13, 2025

செங்கல்பட்டில் சாலையில் பெருக்கெடுத்து ஓடும் கழிவுநீர்

செங்கல்பட்டு நகராட்சியில் 33 வார்டுகள் உள்ளன. அதில் பல்வேறு பகுதிகளில் முறையாக கழிவுநீர் வடிகால்வாய் சீரமைக்கப்படாததால் பல்வேறு இடங்களில் கழிவுநீர் வெளியேறி துர்நாற்றம் ஈசி வருகின்றது. குறிப்பாக செங்கல்பட்டு புதிய பேருந்து நிலையம் அருகே சாலை விவரத்தில் உள்ள வடிகால்வாய் முறையாக சீரமைக்காததால் கழிவுநீர்கள் சாலையில் ஆறு போல் பெருக்கெடுத்து ஓடுகின்றது.

அதிக அளவில் துர்நாற்றம் வீசுவதால் சாலையில் வழியாக செல்லும் பொதுமக்களுக்கும் வாகன ஓட்டிகளுக்கும் நோய் தொற்று ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே நகராட்சி நிர்வாகம் உடனடியாக சாலையில் தேங்கியுள்ள கழிவு நீரையும் வடிகால்வாயை முறையாக சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் சார்பில் கோரிக்கை எழுந்துள்ளது.

Latest news