பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு கடும் தண்டனை அளிக்கும் சட்டத்திருத்த மசோதாவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார்.
சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்தால் தூக்குத்தண்டனை, பெண்களை பின் தொடர்ந்தால் 5 ஆண்டு சிறைத் தண்டனை என, பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு கடும் தண்டனை அளிக்கும் வகையில் தமிழக சட்டப்பேரவையில் சட்டத்திருத்தம் செய்யப்பட்டது. இந்த சட்ட மசோதாவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி, ஒப்புதல் அளித்து, மசோதவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்துள்ளார்.