வட மாநிலங்களில் பனிமூட்டத்துடன் கடும் குளிர் மக்களை வாட்டி வதைத்து வருகிறது. பனிமூட்டம் காரணமாக ரெயில், விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. வாட்டி வதைக்கும் குளிரால் மக்கள் நடுங்கி வருகிறார்கள். மக்கள் தீ மூட்டி தங்களை காத்துக்கொள்கின்றனர்.
தலைநகர் டெல்லியில், கடும் பனி மூட்டம் நிலவுகிறது. வெப்பநிலை 10 டிகிரி செல்சியசுக்கும் கீழ் குறைந்துள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம், கான்பூர் மற்றும் ஆக்ராவில் அடர் பனி மூட்டம்நிலவுகிறது. முகப்பு விளக்குகளை ஒளிரவிட்டபடி வாகன ஓட்டிகள் செல்கின்றனர். ஆக்ராவில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க நினைவுச்சின்னமான தாஜ் மஹாலை மறைக்கும் அளவுக்கு பனி மூட்டம் காணப்படுகிறது.
பஞ்சாப், ஒடிசா, மும்பையிலும் எதிரே வரும் வாகனங்கள் தெரியாத அளவுக்கு பனிமூட்டம் நிலவுகிறது.