இந்த 7 பழங்களை சக்கரை நோயாளிகளும் சாப்பிடலாம்!

436
Advertisement

சக்கரை நோய் வந்துவிட்டாலே இனிப்பு வகைகள் தொடங்கி பழங்கள் சாப்பிடுவது வரை பல கட்டுப்பாடுகளை கடைபிடிக்க வேண்டி உள்ளது. இதனாலேயே Glycemic Index குறைவாக உள்ள பழங்களை தேர்ந்தெடுத்து சாப்பிடுவது அவசியமாகிறது.

உடலுக்கு மிகவும் தேவையான முக்கிய AntiOxidants நிறைந்துள்ள மாதுளைப்பழம் free radicals பாதிப்பு மற்றும் நீடிக்கும் நோய்கள் வராமல் தடுக்கிறது. பச்சை திராட்சையில் உள்ள ரெஸ்வெரட்ரால், இரத்தத்தில் உள்ள சக்கரை அளவுகளை சீராக வைத்து இன்சுலின் சுரப்பில் முன்னேற்றம் ஏற்படுகிறது.

American Journal of Clinical Nutrition ஆய்விதழில் வெளியான அறிக்கையில் ஆப்பிள் உட்கொள்ளுதல் type 2 நீரிழிவு பாதிப்பு ஏற்படும் வாய்ப்புகளை கணிசமாக குறைப்பதாக தெரியவந்துள்ளது.

நார்ச்சத்துக்கள் நிறைந்த கொய்யா பழத்தை சாப்பிடுவதால் மலச்சிக்கல் சரியாவதோடு நீரிழிவு நோய் பாதிப்புகளும் குறைகிறது. பொட்டாசியம் சத்துக்கள் நிறைந்த தர்ப்பூசணி பழம் சிறுநீரக செயல்பாட்டை  அதிகரித்து இரத்தத்தில் உள்ள அமிலத்தன்மைகளை குறைக்க உதவுகிறது. செர்ரி பழங்களில் உள்ள anthocyanins  இன்சுலின் உற்பத்தியை 50 சதவீதம் வரை உயர்த்த வகை செய்கிறது.

Antioxidants, நார்ச்சத்துக்கள் மற்றும் குறைவான glycemic index கொண்ட பப்பாளி பழம் சக்கரை நோயாளிகள் சாப்பிட ஏற்ற பழமாக உள்ளது. இது போன்ற உடலுக்கு நன்மை தரக்கூடிய மற்றும் சக்கரை நோயை சமாளிக்க உதவும் பழங்களை சக்கரை நோயாளிகள் அளவாக எடுத்துக் கொண்டால் சிறப்பான பலன்களை எதிர்பார்க்கலாம் என உணவியல் நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.