அசாம் மாநிலத்தில் தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டுக் ஆணையத்தின் (NHIDCL) அதிகாரியை லஞ்ச புகாரில் சிபிஐ அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
மைஸ்னம் ரிட்டன் குமார் சிங் அசாமின் தலைநகர் கவ்ஹாத்தியில் உள்ள NHIDCL மண்டல அலுவலகத்தில் பணிபுரிந்து வந்தார். இவர் தனியார் நிறுவனத்திடம் பணி நீட்டிப்பு மற்றும் பணி நிறைவுச் சான்றிதழ் அளிப்பதற்காக அவர் ரூ.10 லஞ்சம் வாங்கியுள்ளார்.
இந்நிலையில் சிபிஐ அதிகாரிகள் நடத்திய சோதனையில் அவரிடமிருந்த ரூ. 2.62 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார். மேலும் ஆடம்பர வாகனங்கள் வாங்கியதற்கான ஆவணங்களையும் பறிமுதல் செய்துள்ளனர்.
