ராஜஸ்தான் மாநில காங்கிரசின் மூத்த தலைவர் மற்றும் முன்னாள் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் ரமேஷ்வர் லால் துடி நேற்று இரவு காலமானார். அவருக்கு வயது 62.
கடந்த 2 ஆண்டுகளாக மூளை இரத்தக்கசிவால் கோமா நிலைக்குள் சென்றிருந்த அவர், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நேற்று இரவு காலமானார்.
2013 முதல் 2018 வரை, பாஜக ஆட்சியின் போது ராஜஸ்தான் சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவராக இருந்துள்ளார். அதற்கு முன்னர், பிகானேர் மக்களவை தொகுதியில் இருந்து மாநில எம்.பியாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார்.
இரு முறை மாவட்ட தலைவர், ஒரு முறை எம்.பி., ஒரு முறை எம்.எல்.ஏ. ஆகிய பதவிகளை வகித்துள்ளார். இவரது மறைவுக்கு முதல்வர் பஜன் லால் சர்மா, முன்னாள் முதல்வர் அசோக் கெஹ்லோட், காங்கிரஸ் மாநிலத் தலைவர் கோவிந்த் சிங் டோட்டாஸ்ரா உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.