தெற்கு மும்பையில் உள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டலில் உள்ள அறையில் 60 வயது மூதாட்டி ஒருவர் இறந்து கிடந்துள்ளார். ஜனவரி 6 முதல் ஹோட்டலில் தங்கியிருந்ததாகவும் மேலும் அவர் திருமணம் ஆகாதவர் என்றும் போலீசார் நடத்திய விசாரணையில் தெரிய வந்துள்ளது. முதற்கட்ட பிரேத பரிசோதனை முடிந்த நிலையில் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.