8 முறை சட்டமன்ற உறுப்பினராகச் செயல்பட்டுள்ள மூத்த அரசியல்வாதி செங்கோட்டையன்,அதிமுகவில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய நிலையில் அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். இதையடுத்து விஜய்யின் தவெகவில் இணைந்தார். தமிழக சட்டசபை தேர்தல் பிரச்சாரம் விறுவிறுப்படைந்துள்ள சூழலில், தவெக தலைவர் விஜய் உள்ளிட்ட அவரது கட்சித் தலைவர்களும், வேட்பாளர்களும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதிமுகவில் இருந்து தவெகவுக்கு சென்ற முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், கோபிசெட்டிபாளையம் தொகுதியில் போட்டியிடுகிறார். அங்கு அவர் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டுள்ளார்.
செங்கோட்டையனுக்கு தவெகவில் உரிய மரியாதை இல்லை என்ற பேச்சு இருந்து வருகிறது.இதனால் தவெகவில் இருந்து செங்கோட்டையன் வெளியேறும் மனநிலையில் இருப்பதாக முன்னாள் அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார். தனியார் தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டி ஒன்றில் தான் அவசரப்பட்டு முடிவெடுத்துவிட்டதாகவும், நீங்கள் அந்த தவறை செய்ய வேண்டாம் என அதிமுக முக்கிய தலைவர்கள் சிலரிடம் செங்கோட்டையன் சொன்னதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்துள்ள, அதிமுக முன்னாள் அமைச்சரும், கரூர் தொகுதி அதிமுக வேட்பாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் கூறுகையில், செங்கோட்டையன், தவெகவில் இருந்து வெளியேறும் மனநிலையில் இருப்பதாக கூறியுள்ளார்.மேலும் தான் அவசரப்பட்டு முடிவெடுத்துவிட்டதாகவும், நீங்கள் அந்த தவறை செய்ய வேண்டாம் என்றும் அதிமுக முக்கிய தலைவர்கள் சிலரிடம் செங்கோட்டையன் கூறியுள்ளதாகவும்,. அந்தக் கட்சியில் செங்கோட்டையனுக்கு மரியாதை இல்லை எனவும் தெரிவித்துள்ளார்
