விடுமுறைகளில் பீச்சிற்கு சென்று வரும் போது அங்கு விற்கும் மாங்காய் வாங்கி சாப்பிடாதவர்கள் இருக்க முடியாது.
காரமாகவும், புளிப்பாகவும் சற்று இனிப்பாகவும் இருக்கும் அந்த மசாலாவில் என்ன இருக்கும் என யோசித்துள்ளீர்களா?
அதே போல வீட்டில் செய்து சாப்பிட வேண்டும் என நினைப்பவர்களுக்காகவே தன்னுடைய Youtube பக்கத்தில், டிப்ஸ் கொடுத்துள்ளார் செம்பருத்தி சீரியலில் வனஜாவாக அறியப்பட்ட லட்சுமி.
வெந்தயம், கடுகு, வரமிளகாய் மற்றும் பெருங்காயப்பொடியை எண்ணெயில் தாளித்து, அடுப்பை அணைத்து அதனுடன் உப்பு, மிளகாய் போடி சேர்த்து மிக்சியில் அரைத்து பிறகு மீண்டும் வெல்லம் சேர்த்து அரைத்து கொண்டால் பீச் ஸ்டைல் மாங்காய் மசாலா சுவை வரும் என லட்சுமி கூறியுள்ளார். லக்ஷ்யா ஜங்க்ஷன் என்ற தனது Youtube பக்கத்தில் அவர் தொடர்ந்து சமையல் குறிப்புகளை பகிர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.