அறிமுக இயக்குனர் பிரவீன் இயக்கத்தில் விஷ்ணு விஷால் நடித்துள்ள திரைப்படம் ஆர்யன். இப்படத்தில் மானசா சவுத்ரி, ஷ்ரத்தா ஸ்ரீநாத், வாணி போஜன் மற்றும் செல்வராகவன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.
ஜிப்ரான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வருகிற 31ம் தேதி வெளியாகிறது.
இந்த நிலையில், பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட செல்வராகவன், ஆர்யன் படம் குறித்து பேசியுள்ளார். அதில், “ஆர்யன் படத்தைப் பார்த்து நீங்க நிச்சயம் ஏமாற மாட்டீங்க. ஒரு சில படங்களை பார்த்தலே நமக்கு படம் பாத்தி தெரிஞ்சுடும். இந்த படத்தின் கதை புதுசு. விஷ்ணு விஷால் நல்லா நடிச்சிருக்காரு. எனக்கு படத்தில் அதிக காட்சிகள் இல்ல, ஆனால் விஷ்ணு விஷால் நடிக்கிற விதம் எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு.” என்று கூறியுள்ளார்.
