Monday, May 5, 2025

முதலையுடன் செல்ஃபி : 50 தையல்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை

பிலிப்பைன்ஸ் நாட்டின் கபோக் மாங்குரோவ் உயிரியல் பூங்காவிற்கு சென்ற சுற்றுலா பயணி, அங்கிருந்த குளத்திற்குள் குதித்து முதலையுடன் செல்பி எடுத்தார். அப்போது அந்த முதலை திடீரென சுற்றுலாபயணியை தாக்க தொடங்கியது. சுற்றியிருந்தவர்கள் கூச்சலிட்டதை அடுத்து, அங்கு வந்த பாதுகாவலர்கள் முதலையிடம் இருந்து அவரை மீட்டனர்.

முதலை தாக்கியதில் இளைஞரின் கை, கால்கள், முதுகு மற்றும் வயிற்றில் காயங்கள் ஏற்பட்டது. அவரது உடலில் மொத்தம் 50 தையல்கள் போடப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். சில நாட்களுக்கு முன் நடந்த இந்த சம்பவத்தின் வீடியோ, இணையத்தில் பரவி வருகிறது.

Latest news