IPL தொடரின் சுவாரஸ்யமே அசத்தும் இளம்வீரர்கள் தான். அந்தவகையில் தற்போது மும்பை அணியின் 23 வயது வேகப்பந்து வீச்சாளர் அஸ்வனி குமார், அறிமுக போட்டியிலேயே கவனம் ஈர்த்துள்ளார். KKRக்கு எதிரான போட்டியில் ரஹானே, ரிங்கு சிங், மணிஷ் பாண்டே, ரஸல் என, 4 பவர் ஹிட்டர்களை வீழ்த்தி அதிரடி காட்டியுள்ளார்.
இதையடுத்து அவர்குறித்த தகவல்கள் தற்போது வைரலாகி வருகின்றன. அஸ்வனி குறித்து அவரது தந்தை ஹர்கேஷ் குமார், ” மழை, வெயில் என எதுவாக இருந்தாலும் அஸ்வனி, மொகாலியில் உள்ள கிரிக்கெட் மைதானத்திற்கு காலை 5 மணிக்கு பயிற்சி செய்ய சென்று விடுவான்.
இரவு 10 மணிக்கு வந்தாலும் கூட, ஒருநாளும் அவன் கிரிக்கெட் விளையாடாமல் இருந்ததில்லை. தினமும் ஆட்டோவுக்காக 30 ரூபாய் கொடுப்பேன். சமயங்களில் பணம் இல்லாத போது லிப்ட் கேட்டு செல்வான். ஏலத்தில் 30 லட்சம் ரூபாய்க்கு அவன் எடுக்கப்பட்ட போது, ஒவ்வொரு பைசாவுக்கும் அவன் தகுதியானவன் என்பதை உணர்ந்தேன்,” என்று பெருமிதம் தெரிவித்து உள்ளார்.
இந்தநிலையில் ட்ரையல்ஸ்க்கு வந்த அஸ்வனியை, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி திருப்பி அனுப்பிய சம்பவம் தெரிய வந்துள்ளது. ஒவ்வொரு அணியும் வலைப்பயிற்சியில் எப்படி செயல்படுகின்றனர், என்பதை வைத்து அறிமுக வீரர்களுக்கு வாய்ப்பளிக்கும்.
அப்படி வந்தபோது தான் ”உங்களது பந்துவீச்சு எங்களுக்குத் திருப்திகரமாக இல்லை” என்று கூறி, அஸ்வனியை CSK நிர்வாகம் திருப்பி அனுப்பி இருக்கிறது. இதேபோல ராஜஸ்தான் ராயல்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளும் அவரை நிராகரித்து விட்டன.
பின்னர் மும்பை இந்தியன்ஸ் இவரின் திறமையைக் கணித்து, 30 லட்சம் ரூபாய் கொடுத்து ஏலத்தில் எடுத்தனர். இன்று தன்னை Reject செய்த KKRஐ அஸ்வனி, கண்ணுக்குள் விரலை விட்டு ஆட்டிவிட்டார். சும்மாவா சொன்னாங்க ‘வாழ்க்கை ஒரு வட்டம்னு’!