நாம் தமிழர் கட்சியின் பெண்கள் பாதுபாப்பு பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் காளியம்மாள் தனது பொறுப்புகளில் இருந்து விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அவர் திமுகவில் இணையலாம் எனவும் பேசப்படுகிறது.
மதுரை விமான நிலையத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது காளியம்மாள் குறித்து பேசிய அவர் : “காளியம்மாவை கட்சிக்குள் அழைத்து வந்தது நான்தான். காளியம்மாள் நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகி எந்த கட்சியிலும் சேரலாம். கட்சியில் இருந்து வெளியேற காளியம்மாளுக்கு முழு சுதந்திரம் உள்ளது. பருவ காலங்களில் இலையுதிர் காலம் என்ற ஒன்று இருப்பதுபோல் எங்கள் கட்சிக்கு இது களையுதிர் காலம்.” என அவர் பேசினார்.