Tuesday, February 4, 2025

துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்ட பாதுகாப்பு படை வீரர்

பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ராஜ்நாத் பிரசாத் (55) என்பவர் மத்திய பாதுகாப்பு படையில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார். இன்று, ஜம்மு காஷ்மீரின் ரியாசி மாவட்டத்தில் உள்ள மாதா வைஷ்ணவி தேவி கோவிலின் அருகில் பாதுகாப்பு பணியில் இருந்த ராஜ்நாத், தன்னுடைய துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.

துப்பாக்கி சுடும் சத்தம் கேட்ட பிறகு, அருகில் இருந்த சக வீரர்கள் விரைந்து வந்த போது, அவர் இறந்த நிலையில் கிடந்ததை கண்டனர். சம்பவ இடத்திற்கு வந்த காவலர்கள், உயிரிழந்தவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

பாதுகாப்புப் படை வீரர் துப்பாக்கியால் தற்கொலை செய்த சம்பவம் குறித்து போலீசாரின் அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Latest news