Sunday, January 5, 2025

தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட முயன்ற சீமான் கைது

சென்னை வள்ளுவர் கோட்டத்தில் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்த முயன்ற நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை அண்ணா பல்கலைகழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமையை கண்டித்து நாம் தமிழர் கட்சியினர் போராட்டம் நடத்தினர். ஆனால் போராட்டம் நடத்த காவல் துறை அனுமதி தரவில்லை.

இந்நிலையில் தடையை மீறி போராட்டம் நடத்தியதாக சீமானை போலீசார் கைது செய்துள்ளனர்.

Latest news