உத்தரபிரதேச மாநிலம் லக்னோவைச் சேர்ந்த சந்தியா பாண்டே என்ற பெண் கிட்டத்தட்ட 17 வருடங்களாக வயிற்று வலியால் அவதியடைந்து வந்துள்ளார். இதையடுத்து இரண்டு நாட்களுக்கு முன்பு அந்த பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
மருத்துவ பரிசோதனையில் அவரது வயிற்றில் கத்தரிக்கோல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த பெண்ணுக்கு அறுவை சிகிச்சை செய்து வயிற்றில் இருந்த கத்திரிக்கோலை வெற்றிகரமாக அகற்றினர். இரண்டு நாட்கள் கண்காணிப்பில் வைக்கப்பட்ட பின்னர் அந்தப் பெண் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

இந்த சம்பவம் தொடர்பாக சந்தியா பாண்டேவின் கணவர் அரவிந்த் குமார் பாண்டே போலீசில் புகார் அளித்தார். இந்த விஷயத்தில் முழுமையான விசாரணை நடத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.