விஜய்யின் பையில் கத்தரிக்கோல் : விமான நிலையத்தில் பரபரப்பு

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு ஆஜராக தவெக தலைவர் விஜய் இன்று டெல்லி புறப்பட்டுச் சென்றார். இதற்காக சென்னை விமான நிலையம் வந்த விஜய்யின் உடைமைகளை மத்திய தொழில் பாதுகாப்புப் படையினர் சோதனை செய்தனர். அப்போது விஜய்யின் பையில் கத்தரிக்கோல் இருந்ததாகச் சொல்லப்படுகிறது.

இதனால் விமான நிலையத்தில் தடுத்துநிறுத்தப்பட்ட விஜய், சுமார் 20 நிமிடங்கள் தாமதமாக தில்லி புறப்பட்டுச் சென்றார். விஜய்யுடன் தவெக நிர்வாகி சிடிஆர் நிர்மல்குமார், உதவியாளர் ஜெகதீஷ், ஓட்டுநர் ராஜேந்திரன் உள்ளிட்டோர் உடன் சென்றுள்ளனர்.

சிபிஐ விசாரணைக்காக டெல்லி புறப்பட்ட விஜய்யின் பையில் கத்தரிக்கோல் இருந்ததால் விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Related News

Latest News