Monday, December 1, 2025

புற்றுநோய்க்கு முற்றுப்புள்ளி : Super Vaccine-ஐ உருவாக்கிய விஞ்ஞானிகள்

புற்றுநோய் உலகில் மிகவும் கொடிய மற்றும் பயங்கரமான நோய்களில் ஒன்றாக இருக்கிறது. ஆண்டுதோறும் லட்சக்கணக்கான மக்கள் இதனால் உயிரிழப்பதை நாம் காண்கிறோம். புற்றுநோயை ஆரம்ப கட்டத்தில் கண்டுபிடித்து சிகிச்சை அளித்தால் குணம் பெறலாம். ஆனால், அது இன்னும் மேல் நிலைகள் சென்றால் உயிரை காப்பது கடினமாகிறது.

புற்றுநோயை முன்கூட்டியே கண்டறிதல் மற்றும் வளர்வதை தடுப்பதற்காக பல நாடுகளில் ஆய்வுகள் மற்றும் மருந்துத் தேடல்கள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. ஏஐ தொழில்நுட்பத்தையும் தற்போது புற்றுநோய் மருந்துகள் கண்டுபிடிப்பில் பயன்படுத்தி வருகின்றனர். இத்தகைய சூழலில் மக்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் ஒரு புதிய ஆய்வு முடிவும் வெளியாகியுள்ளது.

அமெரிக்காவின் மசாசூசெட்ஸ் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் விஞ்ஞானிகள் ‘சூப்பர் வேக்சின்’ என்ற ஒரு தடுப்பு மருந்தை உருவாக்கியுள்ளனர். இந்த மருந்து பரிசோதனைக்காக எலிகளுக்கு அளிக்கப்பட்ட போது, புற்றுநோய் ஆரம்பிப்பதற்கு முன்பே அதனை தடுத்துவிடும் திறன் உடையதாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

இந்த மருந்து அளிக்கப்பட்ட எலிகளின் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து, புற்றுநோய் செல்களில் முன்னரே அதனை கண்டறிந்து அழிக்கும் வேலை செய்கிறது. புற்றுநோய் செல்கள் கட்டிகளாக மாறுவதற்கு முன்னரே அவற்றைப் பிடித்து அழிக்கும் திறன் கொண்டது இதன் சிறப்பு.

மேலும், இந்த மருந்து குறிப்பிட்ட வகை புற்றுநோய் மட்டுமில்லாமல் பெரும்பாலான வகைகளையும் தடுக்கும் திறனுடையதாக இருக்கிறது.

பொதுவாக, புற்றுநோய் கட்டிகள் ஒருமுறையாக உருவாகி வளர தொடங்கினால், அவை உடலின் பல பகுதிகளுக்கு பரவி வேலை செய்யும் திறனை அழிக்கின்றன. இதுவே பலரையும் நாம் காப்பாற்ற முடியாமல் விடுவதற்குச் சிக்கல் ஆகும். இந்த மருந்து இதனை தடுக்கும் என்பதால், அது “சூப்பர் தடுப்பு மருந்து” எனப் பெயர் பெற்றுள்ளது.

இந்த மருந்து தற்போது சோதனையில் உள்ளதால், மனிதர்களுக்கு பரிசோதனை செய்ய 10 ஆண்டுகள் வரை ஆகலாம். இருப்பினும், இது புற்றுநோய் ஆராய்ச்சியில் மிக முக்கியமான முன்னேற்றமாக கருதப்படுகிறது. இதன் மூலம் லட்சக்கணக்கில் மக்கள் உயிரைக் காப்பாற்றலாம் என நம்பப்படுகிறது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News

Latest News