ஹரியானா மாநிலத்தில் குளிரின் தாக்கம் அதிகமாக இருப்பதால் அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு ஜனவரி 1ம் தேதி முதல் 15ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 16ம் தேதி வழக்கம்போல் பள்ளிகள் திறக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
மாணவர்களின் உடல் நலன் பாதுகாப்பு கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.