தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே ஆதனூர் கிராமம் கீழ தெருவை சேர்ந்த ராமசாமி என்பவரது மகள் மாலதி. இவர் காட்டுநாயக்கன்பட்டியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வந்துள்ளார்.
இந்த நிலையில் பள்ளி மாணவி வழக்கம் போல பள்ளிக்கு சென்று விட்டுக்கு நேற்று மாலை வீடு திரும்பியுள்ளார். பின்னர் பள்ளி மாணவி தனது வீட்டிற்கு சென்ற சிறிது நேரத்தில் திடீரென மயங்கி விழுந்துள்ளார். இதனைத் தொடர்ந்து பள்ளி மனைவியை பெற்றோர்கள் ஆட்டோவில் மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரிக்கு கொண்டு சென்ற போது வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பள்ளி மாணவி உடலை மருத்துவர்கள் பிரேத பரிசோதனை செய்தனர். அப்போது பள்ளி மாணவி அதிகமாக அரிசி சாப்பிட்டதால் மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.