“மாணவிகள்  படிக்கவிடாம கொடுமபன்றாங்க” – முதல்வருக்கு கடிதம் எழுதிய பள்ளி மாணவர்கள்

309
Advertisement

உத்தரபிரதேச மாநிலம் அவுரையா மாவட்டத்தில் உள்ள நவோதயா பள்ளியின் சிறுவர்கள், தங்கள் வகுப்பில் உள்ள மாணவிகள்  தங்களை கொடுமைப்படுத்துவதாக புகார் கூறி, அப்பள்ளியின் முதல்வருக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் கடிதத்தில், 7ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் , தங்களை பெயர் சொல்லி அழைத்ததற்காக மாணவிகள் தங்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என எழுதியுள்ளனர்.

மேலும் மாணவிகள் , தங்களை ‘லல்லா’ , முட்டாள் போன்ற வார்த்தைகளால் அழைப்பதாக  குறிப்பிட்டுள்ளனர்.

சமூக வலைதளங்களில் வைரலான கடிதத்தின்படி, மாணவிகள் சில மாணவர்களுக்கு  ‘ரஸ்குல்லா’, ‘டாமர்’  போன்ற புனைப்பெயர்களையும் வைத்துள்ளனர்.வகுப்பில் சத்தமாக  பாடி தங்களை படிக்கவிடாமல் தடுக்குகிறார்கள் எனவும்  மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

மற்றும் அந்த கடிதத்தில் மாணவிகளின் சிலர்  பெயர்களும் இடம் பெற்றுள்ளன.இதையடுத்து சம்பந்தப்பட்ட வகுப்பில் உள்ள மாணவ மாணவிகளின் பெற்றோரை அழைத்து இதுகுறித்து விளக்கமளிக்கப்பட்டுள்ளதாக பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கடிதத்திற்குப் பிறகு, மாணவிகளுக்கு  ஆலோசனை வழங்கப்பட்டதாக பள்ளியின் ஆசிரியர் ஒருவர் தெரிவித்தார்.ஆசோசனைக்கு பின் மாணவிகள் மீது மாணவர்கள் எந்த புகாரும் அளிக்கவில்லை  என தெரிவித்து உள்ளது பள்ளிநிர்வாகம்.