திருப்பூரில் மதுபானகடையில் காலி பாட்டிலை கொடுத்து பத்து ரூபாய் திரும்ப பெறும் திட்டம் அமலுக்கு வந்தது.
திருப்பூரில் உள்ள அனைத்து மதுபான விற்பனைக் கடைகளில் பாட்டிலுக்கு கூடுதலாக 10 ரூபாய் வாடிக்கையாளரிடம் இருந்து பெறப்படும் என ஆட்சியர் மனிஷ் நாரணவரே அறிக்கை வெளியிட்டார். இதனை தொடர்ந்து இன்று திருப்பூரில் உள்ள 225 டாஸ்மாக் மதுபான கடைகளில் இந்த நடைமுறை அமலுக்கு வந்தது.
நேற்றைய தினமே நுகர்ப்பொருள் வாணிபக் கழகத்திலிருந்து அதற்கான தயாரிக்கப்பட்ட பிரத்தியேக ஸ்டிக்கர்கள் அனைத்தும் கடைகளுக்கு வழங்கப்பட்டு விட்டது. இந்நிலையில் இன்று விற்பனையாகும் பொழுது மதுபாட்டில் உடன் ஸ்டிக்கர் ஒட்டி மது பிரியர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
மேலும் குடித்த காலி பாட்டில்களை உடனுக்குடன் மது பிரியர்கள் டாஸ்மாக்கில் திரும்ப ஒப்படைத்து பத்து ரூபாய் பெற்று வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
