எஸ்.வி.சேகரின் தந்தை எஸ்.வி.வெங்கடராமன் வாழ்ந்த தெருவுக்கு அவரது பெயரை அரசு வைத்துள்ளது. இதையடுத்து எஸ்.வி.சேகர், தனது குடும்பத்தினருடன் நேரில் சென்று முதலமைச்சர் மு.க ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்தனர்.
இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த எஸ்.வி.சேகர், பேசியதாவது;
2026 தேர்தலில் திமுகவுக்கு ஆதரவாக பரப்புரை செய்ய உள்ளேன். எல்லோருக்குமான முதல்வராகவே நம் முதல்வர் இருக்கிறார். றிப்பிட்ட சமூகத்தினருக்கு திமுக எதிரானது என்று பேசப்படுவது அரசியலுக்காக சொல்லப்படுகிறது.
ஜி.எஸ்.டி.யை குறைத்ததால் மக்களுக்கு நன்மை என்கிறார்கள். முதலில் அந்த ஜி.எஸ்.டி.-யை போட்டது யார்? இனி ஜி.எஸ்.டி குறைந்தாலும் விலைகள் குறையாது.
சினிமாவில் டூயட் பாடிவிட்டு, நேரடியாக எம்.ஜி.ஆர் அரசியலுக்கு வந்தார் என விஜய் நினைத்தால், விஜய்க்கு அரசியல் தெரியவில்லை என்றுதான் சொல்லவேண்டும். மனப்பாடம் செய்து பேசுவது, ’அங்கிள்’ என்றெல்லாம் பேசுவது கைத்தட்டலுக்கு மட்டுமே உதவும்… வாக்காக மாறாது”
இவ்வாறு அவர் பேசினார்.