மாட்டு பொங்கலையொட்டி முதல் ஜல்லிக்கட்டு போட்டி நேற்று மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் நடந்தது. இதையடுத்து பாலமேட்டில் ஜல்லிக்கட்டு போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வாடிவாசலில் சீறி வரும் காளைகளை போட்டி போட்டு கொண்டு வீரர்கள் மடக்கி பிடித்து வருகின்றனர்.
பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வரும் நிலையில், பார்வையாளர் மேடையில் டங்க்ஸ்டன் சுரங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பதாகைகளை ஏந்தி பார்வையாளர்கள் சிலர் அமர்ந்துள்ளனர். அந்த பதாகையில், “SAVE அரிட்டாப்பட்டி” TUNGSTINE MINING” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.