சவுதியில் உருவாகும் பிரம்மாண்டமான ஸ்மார்ட் சிட்டி

429
Advertisement

சவுதியின் இளவரசர் மொஹம்மத் பின் சல்மான் கட்டடக்கலை மற்றும் உள்கட்டமைப்பு வரலாற்றில் சவாலான ஒரு திட்டத்தை முன்னெடுத்துள்ளார்.

500 பில்லியன் டாலர் பட்ஜெட்டில் உருவாக உள்ள இந்த நகரில் பறக்கும் elevatorகள், urban space port  என பல வியக்கத்தகு அம்சங்கள் இடம் பெறவுள்ளன.

106 மைல் பரப்பளவில் கட்டமைக்க திட்டமிடப்பட்டுள்ள இந்நகரில் கார்களை ஓட்ட அனுமதி இல்லை. 400 மில்லியன் டாலர் செலவில் ஒரு அரண்மனை வீதம், மொத்தம் பத்து அரண்மனைகள் கட்டப்படவுள்ளது.

மாசு இல்லா பகுதியாக இளவரசர் உருவாக்க நினைக்கும் இந்த நகருக்கு நியோம் என பெயரிடப்பட்டுள்ளது.

கிரேக்க மற்றும் அரேபிய வார்த்தைகளை இணைத்து எதிர்காலம் என பொருள்படும் வகையில் இப்பெயர் சூட்டப்பட்டுள்ளது.

சவுதியின் அக்வாபா பகுதியில் அமைக்கப்படவுள்ள நியோம் நகர், நியூயார்க்கை விட 33 மடங்கு பெரியதாக இருக்கும் என தெரிவித்துள்ள மொஹம்மத் பின் சல்மான், நியோம் ஒரு நாகரீக புரட்சியாக இருக்கும் எனவும் உலகம் முழுவதும் உள்ள பல மக்களின் வாழ்விடமாக மாறும் என்றும் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.