பா.இரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நாயகனாக நடித்த திரைப்படம் ‘சார்பட்டா பரம்பரை’. கடந்த 2021-ம் ஆண்டு நேரடியாக ஓ.டி.டி.யில் வெளியான இப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் நடிகர் ஆர்யா சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது பேசிய ஆர்யா சார்பட்டா பரம்பரை 2 படம் குறித்த தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது, தற்போது இயக்குனர் பா.ரஞ்சித் ‘வேட்டுவம்’ படத்தை இயக்கி வருகிறார். அதன் பிறகு வருகிற ஆகஸ்ட் மாதம் ‘சார்பட்டா பரம்பரை 2’ படத்தின் படப்பிடிப்பு பணிகள் தொடங்கும் என கூறியுள்ளார்.
இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது.