IPL முடிந்த அடுத்த நாளில் இருந்து சஞ்சு சாம்சன், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு Trading முறையில் செல்லவிருப்பதாக தகவல்கள் வெளியாகின. இதை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ” சாம்சன் நல்ல பேட்ஸ்மேன் அவரை அணியில் எடுக்க முயற்சி செய்வது உண்மை தான்.
அதற்காக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்,” என்று உறுதி செய்தது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் இதுகுறித்து, ” எங்கள் அணியில் உள்ள 6 வீரர்களை மற்ற அணிகள் Trading முறையில் கேட்கின்றன. இதற்காக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்,’ என ஓபனாக பேசியது.
தனது பங்கிற்கு சாம்சனும் மஞ்சள் கோட்டை தாண்டுவது போல, போஸ்ட் போட்டு ரசிகர்களின் எதிர்பார்ப்பினை எகிற வைத்தார். என்றாலும் சாம்சன் விஷயத்தில் இரு அணிகளும் மவுனத்தையே பதிலாக அளித்து வருகின்றன.
சஞ்சு சாம்சனை சென்னைக்கு கொடுப்பதில் ராஜஸ்தானுக்கு எந்த பிரச்சினையும் இல்லை. ஆனால் அவருக்கு சமமாக ருதுராஜ் அல்லது ஜடேஜாவை விட்டுக்கொடுக்க கேட்கிறது. இதற்கு CSK தரப்பு ஒப்புக் கொள்ளாததால் இந்த Trading இன்னும் முடிவுக்கு வரவில்லை.
இந்தநிலையில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி இடையில் புகுந்து, சஞ்சு சாம்சனை தங்களது அணிக்கு இழுக்க தீவிர முயற்சி செய்து வருகிறது. இந்த விஷயத்தில் ராஜஸ்தான் கேட்பதை கொடுக்கவும் கொல்கத்தா தயாராக உள்ளது. ஏனெனில் அந்த அணியின் விக்கெட் கீப்பர்கள் குயிண்டன் டி காக், ரஹ்மனுல்லா குர்பாஸ் இருவரும் 2026 தொடர் முழுவதும் ஆடுவது சந்தேகம் தான்.
அத்துடன் நல்ல ஒரு கேப்டனும் கொல்கத்தாவுக்கு தேவை எனவே. கேப்டன் பதவியுடன், கேட்கும் பணத்தையும் கொடுக்க ரெடியாக உள்ளது. இதன் காரணமாக சஞ்சு சாம்சன் KKRக்கு செல்லவும் வாய்ப்புகள் இருக்கின்றன. இந்தநிலையில் அந்த அணியின் Scout குழுவை சேர்ந்த ஒருவர், சஞ்சு சாம்சனுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை சமூக வலைதளத்தில் பகிர்ந்து, ” சில நினைவுகள் என்றும் சிறப்பானவை” என, பதிவிட்டுள்ளார்.
சஞ்சு சாம்சனை Trading முறையில் வாங்கிட சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் முட்டிமோதும் நிலையில் அவரின் இந்த பதிவு ,சமூக வலைதளங்களில் பெரும் புயலைக் கிளப்பி இருக்கிறது.