சமந்தாவை சாய்த்த கொடிய நோய்! யாரையெல்லாம் தாக்கும்? அறிகுறிகளும் சிகிச்சையும்

60
Advertisement

சமந்தாவிற்கு வந்ததில் இருந்து மயோசிட்டிஸ் நோயும் முக்கிய செய்தியாக மாறி வருகிறது.

அப்படி என்ன நோய் அது? யாரை தாக்க வாய்ப்புள்ளது? நோய் தாக்கினால் என்ன சிகிச்சை எடுத்து கொள்ள வேண்டும் போன்ற தகவல்களை இப்பதிவில் பார்த்து தெரிந்து கொள்வோம்.

பொதுவாக தசைகளை பாதிக்க கூடிய மயோசிட்டிஸ் நோயானது பாலிமயோசிட்டிஸ், டெர்மடோமயோசிட்டிஸ் மற்றும் inclusion body மயோசிட்டிஸ் என மூன்று வகைப்படும். Inclusion body மையோசிட்டிஸ் ஆண்களை அதிகம் பாதிக்கும் சாத்தியக்கூறுகள் உள்ள நிலையில், மற்ற இரண்டு வகையில் பெண்களே அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.

Advertisement

தசை சோர்வு, தசையில் பெலனில்லாமல் எழுந்து நிற்க, நடக்க இயலாமை, உணவு உட்கொள்ள சிரமப்படுதல், மன அழுத்தம் ஆகிய அறிகுறிகளை கொண்டது பாலி மயோசிட்டிஸ். இந்த அறிகுறிகளோடு சேர்ந்து தோலில் சிகப்பாக அரிப்பு ஏற்படுத்தக் கூடிய சொரியும் வந்தால் டெர்மடோமயோசிட்டிஸ் தாக்கியுள்ளதாக பொருள்.

இது போன்ற அறிகுறிகள் தென்பட்டால் இரத்த பரிசோதனை, பயாப்சி, MRI scan, EMG என அழைக்கப்படும் எலெக்ட்ரோ மயோகிராபி மூலம் மருத்துவர்கள் மயோசிட்டிஸ் பாதிப்பை உறுதிப்படுத்துகின்றனர். நோய் தொற்று, தீவிர காயங்கள், மருந்துகளின் பக்க விளைவுகள், நோய் எதிர்ப்பு அமைப்பு சரியாக செயல்படாதது மயோசிட்டிஸ் நோய் தாக்க முக்கிய காரணிகளாக பார்க்கப்படுகிறது.

மயோசிட்டிஸ் நோய்க்கு ஸ்டெரொய்ட்ஸ், Anti Rheumatic மருந்துகள் மற்றும் immunoglobin தெரபி சிகிச்சைகள் அளிக்கப்படுகிறது. எனினும், ஸ்டெரொய்ட்ஸ் வகை மருந்துகளில் நீண்ட கால பக்கவிளைவுகளும் உடன் வருவதாலேயே இந்நோயில் இருந்து குணமடைவது சிக்கலாகிறது.

மயோசிட்டிஸ் நோய்க்கு நிரந்தர தீர்வு இல்லையென்றாலும் சீரான உடற்பயிற்சி, மருத்துவ சிகிச்சை, பிசியோதெரபி மூலம் நோயாளிகளின் ஆயுள்காலத்தை நீட்டிக்க முடியும் என மருத்துவர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.