Thursday, August 21, 2025
HTML tutorial

சல்மான் கானுக்கு இப்படி ஒரு நோயா?.. அதிர்ச்சியில் ரசிகர்கள்

பாலிவுட் சினிமாவில் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக இருப்பவர் சல்மான் கான். சினிமா மட்டுமின்றி டிவியிலும் பிசியாக இருந்து வருகிறார்.

இந்நிலையில் நடிகர் சல்மான் கான் தனது உடல் நல பிரச்சனைகள் குறித்து முதல் முறையாக வெளிப்படையாக பேசியுள்ளார்.

The Great Indian Kapil Show நிகழ்ச்சியில் கெஸ்ட் ஆக கலந்து கொண்ட அவர், தனது உடலில் Trigeminal neuralgia, மூளையில் aneurysm மற்றும் AV malformation போன்ற பல்வேறு சிக்கல்கள் உள்ளதாக தெரிவித்துள்ளார்.

Trigeminal neuralgia காரணமாக முகத்தில் கூர்மையான வலி ஏற்படுவதாகவும், இந்த வலி மருத்துவ உலகில் ‘தற்கொலை நோய்’ என அழைக்கப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார். இந்த பல்வேறு பிரச்சனைகள் இருந்தும், சல்மான் கான் தனது பணிகளை தொடர்ந்து செய்து வருவதாகவும் தெரிவித்தார்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News
HTML tutorial
Latest News