Thursday, December 26, 2024

அபூர்வக் கருப்புக் குதிரை என்று ஏமாற்றிப்
பழுப்பு குதிரை விற்பனை

அபூர்வக் கருப்புக் குதிரை என்று ஏமாற்றிப் பழுப்பு நிறக்
குதிரையை விற்பனை செய்த கலகலப்பான சம்பவம்
அனைவரையும் அண்மையில் நிகழ்ந்துள்ளது-

உலகம் பிறந்தது எனக்காக திரைப்படத்தில் சுத்தியல்
ஜோஷியர் ஆக வரும் காமெடி நடிகர் கவுண்டமணி,
கருப்பாக உள்ள தனது தங்கைக்கு சிவப்பு வண்ணம் பூசி
செந்திலுக்குத் திருமணம் செய்துவைத்துவிடுவார். மறுநாள்
காலையில் குளித்தபின்பு அவரது சிவப்பு நிறம் கரைந்துபோன
பின் தனது மனைவியின் கரிய நிறத்தைப் பார்த்து செந்தில்
அதிர்ச்சி அடைவார்.

சினிமாவில் நகைச்சுவைக்காக அமைக்கப்பட்ட அந்தக் காட்சியை
சிறிது மாற்றி நிஜத்தில் குதிரை விற்ற சம்பவம் இணையத்தில்
வைரலாகி வருகிறது.

பஞ்சாப் மாநிலத்தில் அபூர்வக் கருப்பு நிறக் குதிரை என்றுகூறிப்
பழுப்பு நிறக் குதிரைக்கு சாயம் பூசி அதனை லட்சக்கணக்கான
ரூபாய்க்கு விற்றுள்ளது அனைவரின் கவனத்தையும் ஈர்க்கத் தொடங்கி
உள்ளது.

அம்மாநிலத்தில் உள்ள சங்ரூர் மாவட்டத்தில் உள்ள சுனம் நகரைச்
சேர்ந்த துணி வியாபாரி ரமேஷ் குமார் குதிரை வியாபாரிகளான ஜதீந்தர்
பால் சிங் செகோன், லக்விந்தர் சிங், மற்றும் லச்ரா கான் ஆகியோரிடம்
தனக்கு ஒரு மார்வாரி இன ஆண் குதிரை தேவை என்று கூறியுள்ளார்.

குதிரை வியாபாரிகளும் ஒரு குதிரையை 22 லட்சத்து 65 ஆயிரம் ரூபாய்க்கு
விற்பனை செய்துள்ளனர். குதிரையை வாங்கிய துணி வியாபாரி ரமேஷ்
தனது பண்ணையில் அந்தக் கறுப்புக்குதிரையைக் குளிப்பாட்டியுள்ளார்.

அப்போது கறுப்பு சாயம் வெளுத்து அதன் சுயநிறமான பழுப்பு நிறத்தை
அடைந்தது. தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த ரமேஷ் குமார் போலீசில்
புகார் அளித்தார், போலீஸ் விசாரணையின் முடிவில் போலிக்குதிரையை
விற்றதாக 8 பேரைக் கைதுசெய்துள்ளனர்.

இனப்பெருக்கத்துக்குப் பயன்படும் வீரியம்மிக்க இந்த இனக் குதிரையைக்
கொண்டு ஒரு பண்ணை நடத்தத் துணி வியாபாரி ரமேஷ் திட்டமிட்டிருந்தார்.

சினிமாவில் நகைச்சுவைக்காகக் கற்பனையாக சித்திரிக்கப்பட்ட காட்சிகள்
எல்லாம் ஆங்காங்கே நிஜத்தில் ஏதோ ஒரு ரூபத்தில் நிகழ்ந்துகொண்டுதான்
இருக்கின்றன.

Latest news