மாதம் ரூ. 63,000 சம்பளம்! தமிழகத்திலேயே மத்திய அரசு வேலை!

திருவாரூர் தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகம் (CUTN) 13 கற்பித்தல் அல்லாத பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 10ஆம் வகுப்பு, பட்டப்படிப்புவர்கள் ஜனவரி 21, 2026-க்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

கல்வித் தகுதி மற்றும் வயது வரம்பு

பல்நோக்கு பணியாளர் (MTS) பதவிக்கு விண்ணப்பிக்க 10-ஆம் வகுப்பு தேர்ச்சி அல்லது ITI முடித்திருந்தால் போதுமானது. விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு பதவியைப் பொறுத்து 32 முதல் 35 வயதுக்குள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அரசு விதிமுறைகளின்படி, SC/ST பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், OBC பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் வயது தளர்வு வழங்கப்படும்.

சம்பள விவரம்

பெர்சனல் அசிஸ்டண்ட் மற்றும் சீனியர் டெக்னிக்கல் அசிஸ்டண்ட் (கம்ப்யூட்டர்) போன்ற உயர் பதவிகளுக்கு ஊதிய நிலை 6-ன் படி மாதம் ரூ.35,400 முதல் ரூ.1,12,400 வரை சம்பளம் வழங்கப்படும்.

செமி புரொபஷனல் அசிஸ்டண்ட் பணிக்கு ஊதிய நிலை 5-ன் படி ரூ.29,200 முதல் ரூ.92,300 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மேல்நிலை எழுத்தர் (UDC) மற்றும் ஆய்வக உதவியாளர் பணிகளுக்கு நிலை 4-ன் படி ரூ.25,500 முதல் ரூ.81,100 வரை சம்பளம் வழங்கப்படும்.

தட்டச்சு எழுத்தர் (LDC) மற்றும் இந்தி தட்டச்சாளர் பணிகளுக்கு நிலை 2-ன் படி ரூ.19,900 முதல் ரூ.63,200 வரை ஊதியம் வழங்கப்படும்.

பல்நோக்கு பணியாளர் (MTS) என்ற அடிப்படைப் பணிக்கு நிலை 1-ன் கீழ் ரூ.18,000 முதல் ரூ.56,900 வரை சம்பளம் கிடைக்கும்.

இந்த அடிப்படை ஊதியத்துடன் கூடுதலாக, மத்திய அரசின் விதிகளின்படி அகவிலைப்படி (DA), வீட்டு வாடகைப்படி (HRA) உள்ளிட்ட பிற படிகளும் வழங்கப்படும்.

விண்ணப்பக் கட்டணம் மற்றும் தேர்வு முறை

பொது மற்றும் OBC பிரிவினருக்கான விண்ணப்பக் கட்டணம் ரூ.750 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
SC/ST மற்றும் மாற்றுத்திறனாளி விண்ணப்பதாரர்கள் விண்ணப்பக் கட்டணம் செலுத்த வேண்டிய அவசியமில்லை.

தகுதியான விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு மற்றும் திறன் தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை

விருப்பமுள்ளவர்கள் https://cutn.ac.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைன் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க கடைசி தேதி ஜனவரி 21, 2026 ஆகும்.

ஆன்லைனில் விண்ணப்பித்த பிறகு, அதன் நகலை தேவையான ஆவணங்களுடன் இணைத்து பல்கலைக்கழக முகவரிக்கு அஞ்சல் மூலம் அனுப்ப வேண்டும்.

Related News

Latest News