மாகாபாரதத் தொடரில் வந்த சகுனி மாமா காலமானார் : கடும் சோகத்தில் ரசிகர்கள்…..

214
Advertisement

‘மகாபாரதம்’ என்ற புகழ்பெற்ற தொலைக்காட்சி தொடரில் நடித்து ரசிகர்களிடையே பிரபலமான குபி பெயின்டல்(78) உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலமானார்.

நடிகர் குபி பெயின்டல் ‘மகாபாரதம்’ தொடரில் சகுனி மாமா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
இந்த கதாபாத்திரம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.

இந்நிலையில், கடந்த சில வருடங்களாக இதயம் மற்றும் சிறுநீரக நோய்களால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை எடுத்து வந்துள்ளார்.
கடந்த 10 நாட்களுக்கு முன்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, ஐசியுவில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

மும்பையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதேவேளை, குபி பெயின்டலின் மருமகன் ஹிட்டன் பெயின்டல் அவரது மறைவுச் செய்தியை உறுதி செய்துள்ளார்.

மறைந்த நடிகர் குபி பெயின்டலின் இறுதிச் சடங்குகள் இன்று மாலை 4 மணிக்கு நடைபெறும் என குடும்பத்தினர் அறிவித்துள்ளனர்.
இதனை அறிந்த ரசிகர்கள் அவருக்கு இரங்கள் தெரிவித்து வருகின்றனர்.