மும்பை பாந்திரா மேற்கு பகுதியில் உள்ள 13 மாடி அடுக்குமாடி குடியிருப்பில் கடைசி 4 தளத்தில் நடிகர் சயீப் அலிகான் குடும்பத்துடன் வசித்து வருகிறார். கடந்த 15ம் தேதி அதிகாலை 2.30 மணியளவில் அவரது வீட்டில் திருடுவதற்காக உள்ளே புகுந்த மர்ம நபர் சயிப் அலிகானை கத்தியால் குத்தியுள்ளார். உடனடியாக அவரை மீட்ட குடும்பத்தினர், தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் குற்றவாளியை கைது செய்தனர். இதற்கிடையே நடிகர் சயீப் அலிகான் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில் நடிகர் சயீப் அலி கான், லீலாவதி மருத்துவமனையில் 5 நாட்கள் சிகிச்சைக்குப் பிறகு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். தனது மனைவியுடன் பாந்த்ராவில் உள்ள தனது வீட்டிற்கு சென்றார்.