Monday, February 10, 2025

பிரபல ஹிந்தி நடிகருக்கு கத்திக்குத்து : மருத்துவமனையில் அனுமதி

மும்பையில் பிரபல ஹிந்தி நடிகர் சயிப் அலிகானை மர்ம நபர் கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரபல ஹிந்தி நடிகர் சயிப் அலிகான் மற்றும் நடிகை கரீனா கபூர் தம்பதி மும்பை பந்த்ராவில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இன்று அதிகாலை 2.30 மணியளவில் அவரது வீட்டில் திருடுவதற்காக மர்ம நபர் உள்ளே புகுந்துள்ளார். அப்போது அங்கிருந்த சயிப் அலிகானை மர்மநபர் கத்தியால் குத்திவிட்டு தப்பி ஓடியுள்ளார்.

உடனடியாக அவரை மீட்ட குடும்பத்தினர், தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
சயிப் அலி கான் உடலில் 6 இடங்களில் காயம் ஏற்பட்டுள்ளதாகவும் அதில் 2 இடங்களில் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். தற்போது, அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவம் குறித்து மும்பை குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Latest news