Thursday, August 14, 2025
HTML tutorial

ரசிகர்களுக்கு Surprise கொடுத்த சாய் பல்லவி

வித்தியாசமான கதைகளையும், தனித்துவமான கதாபாத்திரங்களையும் தேர்ந்தெடுப்பதாலும், தனது யதார்த்தமான நடிப்பினாலும் பிரேமம் படம் தொடங்கி, குறுகிய காலத்திலேயே பெரிய ரசிகர் பட்டாளத்தை தன்வசப்படுத்தியவர் சாய் பல்லவி.

கவுதம் ராமச்சந்திரன் இயக்கத்தில், சாய் பல்லவி நடித்து ஜூலை 15ஆம் தேதி வெளியான கார்கி திரைப்படம், விமர்சன ரீதியாக பெரும் வரவேற்பை பெற்றது மட்டுமில்லாமல், திரையரங்குகளிலும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

பாலியல் வழக்கில் சிக்கிக்கொள்ளும் தந்தையை மீட்க, மகள் முன்னெடுக்கும் சட்ட போராட்டத்தை சுற்றி சுழலும் விறுவிறுப்பான கதைக்களம் கொண்ட இப்படத்துக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

இந்நிலையில், படம் பார்க்க வரும் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் வகையில், சென்னையில் கார்கி படம் ஓடும் சில திரையரங்குகளுக்கு சாய் பல்லவி சென்றுள்ளார். அவரை பார்த்து மகிழ்ந்த ரசிகர்களுடன் சாய் பல்லவி, பொறுமையாக  selfie எடுத்துக்கொள்ளும் வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News
HTML tutorial
Latest News