ரஷ்யாவின் முன்னாள் போக்குவரத்து அமைச்சர் ரோமன் ஸ்டாரோவொயிட், ரஷ்ய அதிபர் புதின் பணிநீக்கம் செய்தார். பணிநீக்கம் செய்யப்பட்ட சில மணி நேரங்களில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில தினங்களாக உக்ரைன் டிரோன் தாக்குதல் நடத்தக்கூடும் என ரஷியாவின் ஏராளமான விமானங்கள் தரையிறக்கப்பட்டுள்ளன. இதனால் மக்கள் கடும் அவதி அடைந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்து ரோமன் ஸ்டாரோவாய்ட்டை புதின் அதிரடியாக நீக்கினார்.
அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட சில மணி நேரத்தில், ரோமன் ஸ்டாரோவாய்ட் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துள்ளார்.
இந்த சம்பவம் ரஷ்ய அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.