கேப்டன் ரோகித் சர்மா மற்றும் நட்சத்திர வீரர் விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.
இந்நிலையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற விராட் கோலிக்கு இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இன்ஸ்டாவில் பதிவிட்டிருக்கும் அவர், எண்ணற்ற இளம் தலைமுறையினர் கிரிக்கெட்டில் நுழைவதற்கான உத்வேகத்தை தூண்டியது விராட்தான் எனவும், அதுதான் அவர் விட்டுச் செல்லும் உண்மையான சொத்து என்றும் தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட்டுக்காக வெறும் ரன்களைத் தாண்டி, கிரிக்கெட் மீது மிகுந்த ஆர்வம் கொண்ட வீரர்களையும், ரசிகர்களையும் உருவாக்கித் தந்திருப்பதாகவும் விராட் கோலிக்கு சச்சின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.