ரஷ்யா தற்போது மூன்றாம் உலகப்போரின் ஆரம்பத்தை அறிவித்துள்ளது என உலகம் முழுவதும் பரபரப்பாக உள்ளது. கடந்த சில நாட்களாக, ரஷியாவின் மிசைல் தாக்குதல்களால் ஐரோப்பிய யூனியன் மற்றும் அருகிலுள்ள நாடுகளுக்கு பேரிடர் நிலை ஏற்பட்டுள்ளது. ரஷ்யாவின் இந்த செயலால் உலகின் 27 நாடுகள் மற்றும் 450 மில்லியன் மக்கள் பாதிக்கப்படுவார்கள் என ஐரோப்பிய யூனியன் எச்சரிக்கை செய்துள்ளது. இதன் படி, அடுத்த 72 மணி நேரத்திற்கு அவசியமான உணவு, குடிநீர் உள்ளிட்ட பொருட்களை மக்கள் தயார் நிலையில் வைத்துக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
உக்ரைனும், ரஷியாவுக்கும் இடையே நடந்து கொண்டிருக்கும் போர் தற்போது ஐரோப்பிய நாடுகளுக்கு எச்சரிக்கை அளிக்கும் நிலைக்கு வந்துள்ளது. அதிலும், சமீபத்தில் உக்ரைனின் சுமி நகரத்தில் ரஷ்யா மேற்கொண்ட ஏவுகணை தாக்குதலில் 10க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்த தாக்குதல், 3ம் உலகப்போர் ஆரம்பமாகும் அபாயத்தை மேலும் உறுதிப்படுத்தியுள்ளது.
நேட்டோ (NATO) பொதுச் செயலாளர் மார்க் ருட்டே, “ரஷ்யா 2030 ஆம் ஆண்டுக்குள் ஐரோப்பாவில் மிகப்பெரிய தாக்குதலை நடத்துவதாக எச்சரித்துள்ளார். இது போலாந்து போன்ற சிறிய நாடுகளுக்கு கூட தாக்குதல் செய்ய ரஷ்யா தயாராக இருப்பதாக கூறியுள்ளார். இதனால், ஐரோப்பிய நாடுகள் தொடர்ந்து பாதுகாப்பு நடவடிக்கைகளை பலப்படுத்துகின்றன. இது உலகளாவிய நிலவரத்திற்கு பெரும் ஆபத்தை உருவாக்குகிறது.
இந்நிலையில், ரஷ்யா மூன்றாம் உலகப்போருக்கு எச்சரிக்கை அளிக்கும் வகையில், அண்மையில் ரஷ்யா ஏவுகணை பயிற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. “Ufa” என்ற ரஷ்ய ஆயுத நீர்மூழ்கிக் கப்பலிலிருந்து ஏவப்பட்ட கலிபர்(Kalibr) ரக ஏவுகணை 1000 கி.மீ தொலைவிலுள்ள இலக்கை துல்லியமாக தாக்கி அழித்துள்ளது. இந்த ஏவுகணையின் தாக்குதல் திறன் 2500 கி.மீ தூரத்தை கடக்கக்கூடியதாகும். இது உலகின் பல முக்கிய நகரங்களை தாக்கக் கூடிய வகையில் உள்ளது.
இந்த ஏவுகணை தாக்குதல் 26 ஐரோப்பிய நகரங்களை பாதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதில், உக்ரைன், பெலாரஸ், லித்துவேனியா, லாட்வியா, எஸ்டோனியா, போலந்து, செக் குடியரசு, ஹங்கேரி, ஜெர்மனி, ஆஸ்திரியா, கிரீஸ், இத்தாலி, பிரான்ஸ், நெதர்லாந்து, பெல்ஜியம் உள்ளிட்ட நகரங்கள் அடங்குகின்றன. இந்த ஏவுகணை 450 கிலோ வெடி பொருளை பயன்படுத்தி 50-100 மீட்டர் சுற்றளவில் உள்ள எல்லாவற்றையும் அழித்துவிடும் சக்தி கொண்டது.
இந்த நிலவரம் உலகளாவிய பயங்கரவாதத்தை உருவாக்கும் வாய்ப்பை அதிகரிக்கின்றது. மேலும், ரஷ்யாவின் இந்த நடவடிக்கைகள் ஐரோப்பிய நாடுகளின் பாதுகாப்பு கொள்கைகளையும், அரசியல் நிலவரங்களையும் மாற்றி அமைக்கின்றன. 3ம் உலகப்போரின் அபாயம் உலகின் பல பகுதிகளில் புதிய அச்சுறுத்தல்களையும், அரசியல் மாற்றங்களையும் ஏற்படுத்துகிறது.
உலக நாடுகள், இந்த நிலவரத்தை எவ்வாறு கையாளப்போகின்றன என்பது மிகுந்த முக்கியத்துவம் பெற்ற கேள்வியாக மாறியுள்ளது. சமாதானத்தை உறுதி செய்ய பல நாடுகள் கூட்டணிகளை உருவாக்கி, ரஷியாவின் நடவடிக்கைகளை எதிர்கொள்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்கின்றன. 3ம் உலகப்போரின் எச்சரிக்கை, உலக அளவில் பெரும் பதட்டத்தையும், கவலையும் உருவாக்கியுள்ளது.