“உக்ரைன் – ரஷ்யா போர் ராஜ தந்திரத்தின் மூலமே முடிவடையும்”

386

உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்துள்ள போர் கடந்த 3 மாதங்களை கடந்து நீடித்து வருகிறது.

இந்நிலையில்,  நீண்ட தூரம் சென்றும் தாக்கும் அதிநவீன ராக்கெட்டுகளை உக்ரைனுக்கு அனுப்ப உள்ளதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

உக்ரைன் – ரஷ்யா இடையிலான போர், ராஜ தந்திரத்தின் மூலமே முடிவடையும் என்றும் அவர் கூறியுள்ளார்.

ரஷ்யாவுக்குள் தாக்குதல் நடத்த ஏவுகணைகளை பயன்படுத்த மாட்டோம் என உக்ரைன் உறுதியளித்ததை அடுத்து, 80 கி.மீ தொலைவில் உள்ள இலக்குகளை துல்லியமாக தாக்கக்கூடிய அதிநவீன பீரங்கி ராக்கெட்டுகளை உக்ரைனுக்கு வழங்குவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.