உலக நாடுகளை உரச நினைக்கும் ரஷ்யா …!

501
Advertisement

கடந்த ஒரு மாதங்களாக குண்டுகளால் உக்ரைன் நாடு கொஞ்சம் கொஞ்சமாக அளிக்கப்பட்டு வருகிறது.உக்ரைனுக்கு எதிராக இராணுவ நடவடிக்கையில் தீவிரம் காட்டி வருகிறது ரஷ்யா .

உக்ரைனின் தொழில் நிறுவனங்கள் மற்றும் ஆலைகளை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகிறது. உக்ரைன் மீதான தாக்குதலை உடனே நிறுத்த சர்வதேச நீதிமன்றம் ரஷ்யாவிற்கு உத்தரவிடும் அதனை நிராகரித்தது ரஷ்யா .

இந்நிலையில் ஊடகங்களுக்கு பேட்டி அளித்திருக்கும் ரஷ்யா செய்தி தொடர்பாளர் தற்போது நடைபெற்று வரும் போரில் அணு ஆயுதங்களை பயன்படுத்த மாட்டோம் என்று தெரிவித்துள்ளார்.

அதே சமயம் ரஷ்யா மற்றும் ரஷ்ய மக்களுக்கு அதிக அச்சுறுத்தல் ஏற்படுத்தும் போது அணு ஆயுதங்களை பயன்படுத்தவும் தயங்கமாட்டோம் என கூறியிருப்பது உலக நாடுகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.