Wednesday, February 5, 2025

வாட்டர் டேங்கில் ஒழுகும் தண்ணீர்…மின்சார ஆபத்து ஏற்படும் அபாயம்

மதுரை மாவட்டம், சோழவந்தான் மேம்பாலம் அருகே உள்ள வாட்டர் டேங்கில் கடந்த ஒரு மாதமாக லீக்கேஜ் பிரச்சனை நீடித்து வருகிறது. இந்த லீக்கேஜ் காரணமாக, டேங்கிலிருந்து வெளியேறும் தண்ணீர் அருகில் உள்ள மோட்டார் சுவிட்சை தொட்டு மின்சார ஆபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.

இதுகுறித்து சோழவந்தான் பேரூராட்சியில் பலமுறை புகார் செய்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இந்த வாட்டர் டேங்க் பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தும் பகுதியில் அமைந்துள்ளதால், லீக்கேஜ் காரணமாக சுகாதாரமற்ற சூழல் நிலவுகிறது. மேலும், மின்சார ஆபத்து காரணமாக பொதுமக்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது.

இந்த பிரச்சனைக்கு உடனடியாக தீர்வு காண வேண்டும் எனவும், சுகாதாரமான குடிநீர் வழங்க வேண்டும் எனவும் அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Latest news