புதிய கல்விக் கொள்கை, யுஜிசியின் புதிய விதிகள், வினாத்தாள் கசிவு உள்ளிட்டவற்றுக்கு எதிராக இந்திய தேசிய மாணவர் சங்கம் டெல்லியில் இன்று போராட்டம் நடத்தினர். இதில் கலந்துகொண்டு பேசிய எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, “இந்திய கல்விமுறையை அழிக்க ஆர்எஸ்எஸ் முயற்சி செய்து வருகிறது.
ஏனெனில் ஆர்எஸ்எஸ்ஸால் பரிந்துரை செய்யப்பட்டவர்கள்தான் இப்போது இந்தியா முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களாக உள்ளனர். நம்முடைய கல்விமுறை அவர்களது கைகளுக்குச் சென்றால் இந்த நாடு அழிந்துவிடும், வேலைவாய்ப்பும் இல்லாமல் போய்விடும்.
சில நாள்களுக்கு முன்பு பிரதமர் மோடி, கும்பமேளா குறித்துப் பேசினார். ஆனால் வேலைவாய்ப்பின்மை குறித்து அவர் பேச வேண்டும் என கூறினார்.