கர்நாடக மாநிலம், ராய்ச்சூர் மாவட்டம் லிங்கசுகூர் தாலுகா ரோடலபண்டா கிராம பஞ்சாயத்தில் வளர்ச்சி அதிகாரியாக பிரவீன் குமார் என்பவர் பணியாற்றி வந்தார். இவர் கடந்த 12-ந் தேதி லிங்கசுகூரில் நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்தில் சீருடை அணிந்து கொண்டு கலந்துகொண்டார்.
இது தொடர்பான புகைப்படம் சமூக வலைத்தளத்தில் பரவிய நிலையில் இது குறித்து விசாரணை நடைபெற்றது. இதையடுத்து பிரவீன் குமார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இது அரசு அதிகாரிகளிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கர்நாடகாவில் ஆர்.எஸ்.எஸ்.க்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. மேலும் அரசு ஊழியர்கள் யாரும் ஆர்.எஸ்.எஸ். நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளக்கூடாது என அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
