பீகார் மாநில சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தேர்தல் அறிக்கையை தேசிய ஜனநாயகக் கூட்டணி இன்று வெளியிட்டது.
தேசிய ஜனநாயக கூட்டணி தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்கள்:
தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியமைத்த பின்னர் 1 கோடிக்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு அரசு வேலை வழங்கப்படும். திறன் கணக்கெடுப்பு நடத்தப்பட்டு அதன் அடிப்படையில் வேலைவாய்ப்பு உருவாக்கப்படும்.
இலவச ரேஷன், 125 யூனிட் இலவச மின்சாரம், ரூ.5 லட்சம் வரை இலவச மருத்துவ சிகிச்சை, ரூ.5 லட்சத்தில் புதிய வீடுகள் மற்றும் ஏழைகளுக்கு சமூகப் பாதுகாப்பு ஓய்வூதியம் ஆகியவை உறுதியளிக்கப்படும்.
முதல்வரின் மகளிர் வேலைவாய்ப்புத் திட்டத்தின் மூலம், பெண்களுக்கு ரூ.2 லட்சம் வரை நிதி உதவி வழங்கப்படும். ‘மிஷன் கோடீஸ்வரர்’ திட்டம் மூலம் பெண் தொழில்முனைவோர் கோடீஸ்வரர்களாக மாற்றப்படுவார்கள்.
அனைத்து பயிர்களுக்கும் குறைந்தபட்ச ஆதரவு விலை வழங்கப்படும். கர்புரி தாக்கூர் கிசான் சம்மன் நிதி திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ரூ.3,000 வழங்கப்படும். இதன்மூலம் விவசாயிகளுக்கு வழங்கப்படும் ஆண்டு உதவித்தொகை ரூ.6,000 லிருந்து ரூ.9,000 ஆக உயர்த்தும்.
மீனவர்களுக்கான உதவி ரூ.4,500 லிருந்து ரூ.9,000 ஆக உயர்த்தப்படும். மாநிலத்தின் விவசாய உள்கட்டமைப்பில் ரூ.1 லட்சம் கோடி முதலீட்டை அரசாங்கம் உறுதி செய்யும்.
