2025-26 நிதியாண்டிற்கான தமிழக பட்ஜெட் தாக்கல் நடைபெற்று வருகிறது. நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்து வருகிறார்.
இந்த பட்ஜெட்டில் வரும் நிதியாண்டில் 10,000 புதிய மகளிர் சுய உதவிக் குழுக்கள் அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வரும் ஆண்டில் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.37,000 கோடி கடன் வழங்கப்படும்.
ஊர்க்காவல் படையினருக்கு சமமான ஊதியம் மூன்றாம் பாலினத்தவருக்கும் தரப்படும்.
மகளிர் விடியல் பயணத் திட்டத்துக்கு ரூ.3,600 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.