ஒரே நொடியில் ரூ.114 கோடி ஐபோன்கள் விற்பனை

387
Advertisement

கற்றோருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு என்பதைப்போல
ஐபோன் வைத்திருப்போருக்கு செல்லும் இடமெல்லாம் சிறப்பு
என்னும் நிலைதான் தற்போது நிலவி வருகிறது.

இதை செல்போன் மோகம் என்பதைவிட, செல்போன் இல்லையேல்
இயங்க முடியாது என்னும் மனநிலைக்குப் பலர் வந்துவிட்டனர்.
எனவே, சாதாரண செல்போன் முதல் ஆன்ட்ராய்டு, ஐபோன்வரை
செல்போன் விற்பனை எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

அதுவும் ஆன்லைனில் தள்ளுபடிச் சலுகை தந்து விற்பனை
செய்யப்படுவதால் மளமளவென செல்போன்கள் விற்றுத்
தீர்ந்துவிடுகின்றன.

2021 ஆம் ஆண்டில் ஒரே நொடியில் 114 கோடி ரூபாய்க்கு
ஐபோன்கள் விற்பனையாகி பரபரப்பைக் கிளப்பியுள்ளன.
இதை ஐபோன் நிறுவனம் தனது வலைத்தளத்தில் தெரிவித்துள்ளது.

சீமென்ஸ் மற்றும் ஜியோமி நிறுவனங்களும் இதே அளவு
விற்பனையை மூன்று நிமிடங்களில் செய்து சாதனை படைத்துள்ளன.
சாம்சங் நிறுவனத் தயாரிப்புகள் ஒரே ஆண்டில் 200 சதவிகிதம் அதிகரித்துள்ளது.

ரியல்மி, ஐகூ ஆகிய நிறுவனங்கள் ஒரே ஆண்டில் 6 மடங்கு
அதிகமாகத் தங்கள் தயாரிப்புகளை விற்றுப் புதுமை படைத்துள்ளன.

என்றாலும், ஆப்பிள் நிறுவனமே ஒட்டுமொத்த விற்பனையில்
முதலிடம் பிடித்து சிகரத்தில் உள்ளது.

Jd.com என்னும் சீனாவின் மிகப்பெரிய செல்போன் ரீ
டெய்ல் நிறுவனம் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது.