ரூ.1000 தள்ளுபடி., பட்ஜெட் விலையில் மிரட்டும் லாவா போல்ட் 5ஜி

நொய்டாவைத் தலைமையிடமாகக் கொண்ட லாவா நிறுவனம் தனது புதிய ஸ்மார்ட்போனான லாவா போல்ட் 2 5ஜி மாடலை வெள்ளிக்கிழமை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. கடந்த 2025 ஏப்ரல் மாதத்தில் வெளியான லாவா போல்ட் 5ஜி மாடலின் வெற்றியைத் தொடர்ந்து, அதன் அடுத்த தலைமுறை அப்டேட்டாக இந்த ஸ்மார்ட்போன் சந்தைக்கு வந்துள்ளது.

இந்த போன் 6GB RAM மற்றும் 128GB ஸ்டோரேஜ் கொண்ட ஒரே வேரியண்ட்டில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் விலை ரூ.13,999 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மார்ச் 19-ம் தேதி மதியம் 12 மணி முதல் அமேசான் இணையதளம் வழியாக விற்பனைக்கு வருகிறது.

Feather White மற்றும் Midnight Black ஆகிய இரண்டு நிறங்களில் இந்த ஸ்மார்ட்போன் கிடைக்கிறது. அறிமுக சலுகையாக அனைத்து வகையான பணப் பரிவர்த்தனைகளுக்கும் ரூ.1,000 தள்ளுபடி கூப்பன் குறிப்பிட்ட காலத்திற்கு வழங்கப்படுகிறது. மேலும், இந்த போனை வாங்குபவர்களுக்கு லாவா நிறுவனம் இலவச டோர்ஸ்டெப் சர்வீஸ் வசதியையும் வழங்குகிறது.

இந்த ஸ்மார்ட்போனில் 6.67 இன்ச் அளவிலான Full-HD+ AMOLED திரை வழங்கப்பட்டுள்ளது. இது 120Hz ரெஃப்ரெஷ் ரேட் வசதியுடன் வருகிறது. தூசி மற்றும் நீர் சிதறல்களில் இருந்து பாதுகாப்பிற்காக IP64 ரேட்டிங் வழங்கப்பட்டுள்ளது. இதன் தடிமன் வெறும் 7.55 மில்லிமீட்டர் மட்டுமே.

இந்த போனில் மீடியாடெக் டைமன்சிட்டி 7060 சிப்செட் பொருத்தப்பட்டுள்ளது. இதன் அதிகபட்ச வேகம் 2.6GHz ஆகும். அன்டுடு பெஞ்ச்மார்க் சோதனையில் இது 0.5 மில்லியனுக்கும் அதிகமான புள்ளிகளைப் பெற்றுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. இதில் 6GB LPDDR5 RAM மற்றும் 128GB UFS 3.1 ஸ்டோரேஜ் வசதி வழங்கப்பட்டுள்ளது.

கேமரா அம்சங்களைப் பொறுத்தவரை, பின்புறத்தில் செவ்வக வடிவ மாட்யூலில் 50 மெகாபிக்சல் சோனி சென்சார் கொண்ட பிரதான கேமரா மற்றும் கூடுதலாக ஒரு இரண்டாம் நிலை கேமரா என டூயல் கேமரா அமைப்பு உள்ளது. முன்புறத்தில் செல்ஃபி மற்றும் வீடியோ அழைப்புகளுக்காக 8 மெகாபிக்சல் கேமரா ஹோல்-பஞ்ச் வடிவில் வழங்கப்பட்டுள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் லேட்டஸ்ட் ஆண்ட்ராய்டு 15 இயங்குதளத்தில் செயல்படுகிறது. தேவையற்ற செயலிகள் மற்றும் விளம்பரங்கள் இதில் இருக்காது என லாவா நிறுவனம் உறுதியளித்துள்ளது.

மேலும், 5,000mAh திறன் கொண்ட பேட்டரி மற்றும் 33W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு அம்சமாக திரையிலேயே அமைந்த கைரேகை ஸ்கேனர் (In-display fingerprint scanner) இதில் இடம்பெற்றுள்ளது.

Related News

Latest News