Tuesday, April 22, 2025

கடைசி நேரத்தில் வெளியான அறிவிப்பு : தேர்வு எழுத வந்தவர்கள் அதிர்ச்சி

ரயில்வேயில் 18,799 உதவி லோகோ பைலட் பணியிடங்களுக்கு முதல்நிலை கணினித் தேர்வு முடிவடைந்து முடிவுகள் வெளியான நிலையில் அதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு இன்றும் நாளையும்(மார்ச் 19, 20) இரண்டாம் நிலை கணினித் தேர்வு(CBT 2) நடைபெறவிருந்தது.

இந்நிலையில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இன்று நடைபெறவிருந்த இரண்டு ஷிப்ட் தேர்வுகளும் ஒத்திவைக்கப்படுவதாக தேர்வுக்கு சற்று நேரம் முன்னதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தேர்வர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

தெலங்கானா உள்ளிட்ட அண்டை மாநிலங்களுக்கு இன்று தேர்வு எழுதச் சென்ற நிலையில் தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளதால் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

Latest news